7. மொழியிறுதி எழுத்துக்கள்

வகரமெய் நான்மொழிக்கு ஈறாதல்

81.வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.

இதுவும் மொழிவரையறை.

வகரக் கிளவி1 நான்மொழி ஈற்றது - வகரமாகிய எழுத்து நான்குமொழி ஈற்றதாம்.

எ - டு: அவ், இவ், உவ், தெவ் என வரும்.

(48)

1. கிளவி ஆகுபெயர் எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின் (நச்.)

"மகரத் தொடர்மொழி... அஃறிணை மேன" என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான், என வரும் ஒன்பதும் மயங்காதன எனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க" என்பது நன்னூல் மயிலை நாதருரை (நூ, 121). (பாவாணர்)