இதுவும் அது. இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அ பால் ஐந்தும்-இ ஈ எ ஏ ஐ என்று சொல்லப்படும் அக் கூற்று ஐந்தும், அவற்று ஒர் அன்ன - மேற்கூறிய அகர ஆகாரங்கள் போல அங்காந்து சொல்லப் பிறக்கும், அவைதாம் பல் அண் நாமுதல் விளிம்பு உறல் உடைய - அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்குமிடத்துப்) பல்லினது அணிய இடத்தினை நாவினது அடியின் விளிம்பு சென்று உறுதலை யுடைய. (4)
|