2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

உகரம் முதலிய பிறக்குமாறு

87.உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்.

இதுவும் அது.

உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும் அ பால் ஐந்தும் - உ ஊ ஒ ஓ ஒள எனச் சொல்ல இசைக்கும் அக் கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும் - இதழ் குவித்துச் சொல்ல நடக்கும்.

(5)