இஃது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. ககாரம் ஙகாரம் நாமுதல் அண்ணம் (முதல் ) - ககாரமும் ஙகாரமும், நாமுதலும் அண்ணமுதலும் உறப்பிறக்கும்.1 (7)
1.உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினும் தனிமெய்யாகக் கூறிக் காண்க. முதலை இரண்டிற்கும் கூட்டுக. ( நச் )
|