நூன்மரபு

3.எண்

பதினெண் மெய்

9.னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.

இஃது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கும் ஓர் குறியிடுதல் நுதலிற்று1

னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் - னகரமாகிய இறுதியையுடைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப - மெய்யென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.

(9)

1. இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க்குந்தான் இடம் கொடுத்து அவற்றான் இயக்குந் தன்மையான் உடம்பாய் நிற்றலின். (நச்சி).