2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்தது
ற, ன

94.அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

அணரி1 நுனிநா அண்ணம் ஒற்ற-அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, றஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும்-றகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்.

இங்கு நின்றும் நெடுங்கணக்கு முறைமை விட்டும் நா 2அதிகாரம் பட்டது கண்டு கூறுகின்ற தெனவுணர்க.

(12)

1. அணரி-மேனோக்கிச் சென்று.

2. நாவினால் ஏற்பட்ட முறைமை. (பாவாணர்)