2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்தது
ல, ள

96.நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

நா விளிம்பு வீங்கி பல் அண் முதல் உற - நாவினது விளிம்பு தடித்துப் பல்லினது அணிய இடத்தைப் பொருந்த, அ வயின் அண்ணம் ஒற்ற லகாரமும் வருட ளகாரமும் அ இரண்டும் பிறக்கும் - அவ்விடத்து (முதல்நா) அவ்வண்ணத்தை ஒற்ற லகாரமும் அதனைத் தடவ ளகாரமுமாக அவ்விரண்டும் பிறக்கும்.

(14)