2. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

மேலனவற்றிற்கு ஒர் ஐயந் தீர்த்தது

99.அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை1
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்.

இதுவும் அது.

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை கண் உற்று அடைய யகாரம் பிறக்கும் - அண்ணத்தை நாச் சேர்ந்த விடத்து மிடற்றினின்றும் எழும் வளியானாய இசை அவ்வண்ணத்தை அணைந்து செறிய யகாரம் பிறக்கும்.

(17)

1. உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை அண்ணத்தை அணைந்து உரலாணி2 இட்டாற் போலச் செறிய யகார வொற்றுப் பிறக்கும். (நச்)

2.உரலாணி உரற்குழி பள்ளமாகியாகி அடியில் துளை விழுந்த பின் அதை அடைக்கும்படி செறிக்கும் மரத்துண்டு. (பாவாணர்.)