அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த கிழமைய, வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்றவழி; எ-று. பழியஞ்சும் என்புழி, பழியினஞ்சும், பழியைஞ்சும் என இரண்டும், ஒத்த கிழமையவாய் நின்றவா றறிக. அஃதேல், ஒரு பொருட்கண் வரினன்றே மயக்கமாவது;இவை செயப்படு பொருளும் ஏதுவுமாகிய பொருள் வேறுபாடுடையவாகலின் மயக்கமாகறென்னையெனின்:- அன்றன்று; ஈண்டேதுவாதலே அஞ்சப்படுதலாய் வேறன்றிநிற்றலின், ஒரு பொருட்கண் வந்தனவேயாம்; அதனான் மயக்கமாமென்பது. (17) |