3.வேற்றுமை மயங்கியல்

அவ் வுருபுகளின் இயல்புகள்

வேற்றுமை, பொருள் பற்றியது

106யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்.
 

ஒரு தொடர் யாதானுமோர் வேற்றுமையதுருபு கொடுத்துச் சொல்லப் பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளான் அத் தொடர்பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும்; எ-று.

பொருள் செல்லாமையாவது உருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லுந் தம்மு ளியையாமை. அவ்வேற்றுமையைச் சார்தலாவது அதன் பொருட்டாதல்.

எ - டு:`கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்.' (அகம்- 212)

என்றவழி நான்காவதன் பொருளான் அவ் வுருபேற்ற சொல்லும் அவ்வுருபு நோக்கிய சொல்லும், தம்மு ளியையாமையின், அவற்றை யியைக்கும் ஏழாவதன் பொருட்டாயினவாறு கண்டுகொள்க.

உருபு தன் பொருளிற்றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்குமென உருபுமயக்கங் கூறியவாராயிற்று.

அஃதேல், அரசர்கட்சார்ந்தான் என்புழியும் இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது சென்றதென்றமையான், அதனோடிதனிடை வேற்றுமை யென்னையெனின் - அரசர்கட்சார்ந்தான் என்புழி. அரசரது சார்தற்கிடமாதலே சாரப்படுதலுமாய் இருபொருண்மையும் ஒற்றுமைப்பட்டு நிற்றலின் தத்தம்பொருள்வயிற் றம்மொடு சிவணு மாகு பெயர் போல. இடப் பொருண்மைக்குரிய கண்ணெனுருபு அவ்விடப் பொருண்மையோடு ஒற்றுமையுடைத்தாகிய செயப்படு பொருட்கும் ஆண்டுரித்தேயா0ம். மணற்கீன்ற என்புழி, நான்காவதன் பொருளோடு ஏழாவதன் பொருட்கென்னு1 மியைபின்மையான், ஒப்பில்வழியாற் பிறிதுபொருள் சுட்டும் ஆகுபெயர்போல, அப்பொருட் குரித்தன்று வந்ததெனப்படும். அன்னபிறவற்றுள்ளும் இவ் வேறுபாடு தெரிந்துணர்க.

தன்பொருளிற் றீர்தல் இலக்கணமன்மையின், இதனையிலக்கணத் தோடுறழ்ந்து வருவனவற்றோடு வைத்தார்.

(23)

1.என்னும் - சிறிதும்.