விதிமுகத்தாற் கூறாது எதிர் மறுத்துக்கூறினும், தத்தமிலக்கணத்தான் வரும் பொருணிலைமை திரியா வேற்றுமையுருபு; எ-று. எ - டு: மரத்தைக் குறையான், வேலா னெறியான் என வரும். என் சொல்லியவாறோவெனின்:- குறையான், எறியான் என்றவழி வினை நிகழாமையின், மரமும் வேலுஞ் செயப்படு பொருளுங் கருவியு மெனப்படாவாயினும், எதிர்மறை வினையும் விதிவினையோடொக்கு மென்பது நூன் முடிபாகலான், ஆண்டுவந்த உருபுஞ் செயப்படு பொருண் முதலாயினவற்று மேல் வந்தன வெனப்படுமென வழுவமைத்தவாறு. பிறவுமன்ன. (24) |