3.வேற்றுமை மயங்கியல்

அவ் வுருபுகளின் இயல்புகள்

உருபுகளின் திரிபு

109அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல்லென மொழிப.
 

அஃறிணைப் பெயர்க்கண் அகரத்தொடு சிவணி ஈறுதிரிதல் குவ்வும் ஐயுமில்லென எய்தியது விலக்கியவாறு.

`அ எனத் திரிதலை' `அ எனப்பிறத்த' லென்றார்.

(26)