நான்கனுருபல்லாத பிறவுருபுத் தொகையல்லாத தொடர்மொழிக்கண் ஒன்றன்பொருள் சிதையாமை ஒன்று மயங்குதற்கட் குற்றமில, வழங்கு முறைமையான்; எ-று. எ - டு:நூலது குற்றங்கூறினான் எனவும் தொடர் மொழிக்கண் நூலைக் குற்றங்கூறினான் எனவும் , அவட்குக்குற்றேவல் செய்யும் என்னுந் தொடர்மொழிக்கண் அவளது குற்றேவல் செய்யும் எனவும் வருவனகொள்க பிறவுமன்ன (28)
1. மானித்தல் - கருதுதல் , அளவிடுதல் , மானம் - கருத்து, மதிப்பு, அளவு. அளவு ஒன்றன் வரையறையாதலின் , அளவுக்கருத்தில் விலக்கற்கருத்துத் தோன்றும் . மானமில - விலக்கத் தக்கனவல்ல. ஒப்புநோக்க: வரைநிலை - விலக்ககுநிலை. "வரைநிலை யின்றே" (219). வரை - அளவு. விலக்கு, மானம் என்னுஞ் சொல் 'தமிழ்மொழி - நூல்' ஆசிரியர் கருது கிறவாறு வடசொல்லன்று |