`உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்' (சொல் - 4) என்று மேற் கூறப்பட்ட ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி ஆடூஉவறி சொல்லோடு புணர்தற்குப் பொருந்தும் இடனுடைத்தன்று; எ-று. ஆண்மையறி சொற்கு ஆகிடன் இன்று என்ற விலக்கு ஆண்மையறி சொல்லோடு புணர்த லெய்திநின்ற பேடிக் கல்லது ஏலாமையின் அலிமேற் செல்லா தென்க. இச் சூத்திரத்தைப் `பெண்மை கட்டிய' என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது ஈண்டு வைத்தார். இது வழுவற்க என்கின்றதாகலான். (12) |