மேற்கூறப்பட்ட நான்கீறுமல்லா உயிரீறு உயர்திணைக்கண் விளி கொள்ளாவென்று சொல்லுவர் புலவர் ; எ-று . கொள்வன இவையென வரையறுத் துணர்த்தவே, ஏனைய கொள்ளா வென்ப துணரப்படும் . வரையறைக்குப் பயன் அதுவாகலான் அதனா னிச்சூத்திரம் வேண்டா வெனின் : - அஃதொக்கும் : வரையறையாற் பெறப்படுவதனையே ஒரு பயன் நோக்கிக் கூறினார். யாதோ பயனெனின் :- ஏனையுயிர் விளிகொள்ளாவென, மேற்கூறப்பட்ட உயிர் கூறியவாறன்றிப் பிறவாற்றானும் விளி கொள்வனவு முளவென்பதுணர்த்துதற்கென்பது. எ - டு:கணி, கணியே ; கரி, கரியே என வரும் . பிறவுமன்ன. தாமென்பதனான் ஏனையுயிர் தம்மியல்பாற் கொள்ளா வாயினுஞ் சொல்லுவான் குறிப்புவகையாற் கொள்வனவு முளவென்பதாம். மகவென்பதுவிளி பெறாதாயினுஞ் சொல்லுவான் குறிப்பான் மகவேயென விளியேற்றவாறு கண்டு கொள்க. (7) |