4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

அண்மை விளி

127அண்மைச் சொல்லே யியற்கை யாகும்.
 

நான்கீற் றண்மைச்சொல்லும் இயற்கையாய் விளி யேற்கும் ; எ-று .

அண்மைக்கண் விளி கொள்வதனை `அண்மைச்சொல்' என்றார்

எ - டு:நம்பி வாழி , வேந்து வாழி , நங்கை வாழி , கோ வாழி என வரும்.

(10)