உயிரீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்தி , இனிப் புள்ளியீற் றுயர்திணைப்பெயர் விளியேற்குமா றுணர்த்துகின்றார். புள்ளியீற்றுயர்திணைப்பெயர் ன ர ல ள வென்னும் அந்நான்கீற்ற வென்று சொல்லுவர் ஆசிரியர் ; எ-று. ன ர ல ள வென்னுமொற்றை ஈறாகவுடைய சொல்லை `ன ர ல ள' வென்றார். (11) |