அந்நான்குமல்லாத புள்ளியீற்றுப் பெயர் விளி கொள்ளா ; எ-று. ஈண்டும் விளிகொள்ளா வென்றதனாற் பயன் கூறப்பட்ட புள்ளியீறு பிறவாற்றான் விளி கொள்வனவுளவென்ப துணர்த்தலாம். எ - டு:பெண்டிர் பெண்டிரோ எனவும், தம்முன், தம்முனா எனவும் வரும். பிறவுமன்ன. `விளங்குமணிக் கொடும்பூணாஅய்' (புறம் - 130) என ஏனைப் புள்ளி சிறுபான்மை விளியேற்றலுங் கொள்க. (12) |