4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ஆன் என்னும் ஈறு

132ஆனென் இறுதி இயற்கை யாகும்.
 

ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் ; எ-று.

சேரமான் , மலையான் என்பன கூவுதற்கண்ணும் அவ்வாறு நிற்றல் கண்டு கொள்க.

(15)