4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

அதன்கண் வினையாலணையும் பெயர்

133தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

தொழிலா னொருபொருளைச் சொல்லும் ஆனீற்றுப் பெயர் விளிக்கண் ஆயாம் ; எ-று.

எ - டு: வந்தான் , வந்தாய் ; சென்றான் , சென்றாய் என வரும்.

விளியதிகாரமாகலான் விளிவயினான எனல் வேண்டா எனின் : - சொல்லில் வழி உய்த்துணர்வதென்று மறுக்க.

(16)