ஆனீற்றளபெடைப் பெயர் இகரவீற்றளபெடைப் பெயரேபோல மூன்று மாத்திரையி னீண்டு இயல்பாய் விளியேற்கும் ; எ-று. எ - டு: உழா அ அன், கிழா அஅ அன் என வரும். அளபெடை மூன்று மாத்திரையின் நீண்டிசைத்தலாகிய விகாரமுடைமையான் ஆனெ னிறுதி யியற்கை யாகும் (சொல் - 132) என்புழி அடங்காமை யறிக. (18) |