4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

முறைப் பெயர்

136முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.
 

னகாரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளி யேற்கும் ; எ-று.

எ - டு: மகன், மகனே, மருமகன், மருமகனே என வரும்.

(19)