4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

னகர ஈற்றுள் விளி ஏலாதவை

137தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே.
 

தானென்னும் பெயரும் , அவன் இவன் உவனென்னும் சுட்டுமுதற்பெயரும் , யானென்னும் பெயரும், யாவனென்னும் வினாப்பெயருமாகிய அவ்வனைத்தும், னகரவீறே யாயினும், விளிகொள்ளா ; எ-று.

(20)