4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ரகார ஈறு

138ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.
 

நிறுத்த முறையானே ரகாரவீறு விளியேற்குமாறுணர்த்துகின்றார்.

ரகாரவீற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும்; எ-று.

எ - டு: பார்ப்பார் , பார்ப்பீர் ; கூத்தர் , கூத்தீர் என வரும்.

(21)