4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

அதன்கண் வினையாலணையும் பெயர்

139தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.
 

மேற்கூறிய இரண்டீற்றுத் தொழிற் பெயர்க்கும் ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமன்று. எ-று.

எ - டு: வந்தார் , வந்தீரே; சென்றார் , சென்றீரே என வரும்.

அர் ஈற்றுத் தொழிற்பெயர் வந்தவழிக் கண்டுகொள்க.

ஏகாரம் வருதலும் வழுக்கின்றென்றதனான் , ஏகாரம் பெறாது ஈரோடு சிவணலே பெரும்பான்மை யென்பதாம்.

(22)