4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

பண்புப் பெயர்

140பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.
 

அவ்விரண்டீற்றுப் பண்புகொள் பெயரும், அவ்வீற்றுத் தொழிற்பெயர் போல , ஈரோடு சிவணியும், சிறுபான்மை ஈரோ டேகாரம் பெற்றும் விளியேற்கும்; எ - று.

கரியார் , கரியீர் , இளையர் , இளையீர் எனவும் ; கரியீரே. இளையீரே எனவும் வரும்.

(23)