4.விளிமரபு

2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

லகர ளகர ஈறு

144எஞ்சிய விரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.
 

நிறுத்த முறையானே லகாரளகார வீற்றுப்பெயர் விளியேற்குமாறுணர்த்திய எடுத்துக்கொண்டார்.

உணர்த்தாது நின்ற லகார ளகாரமென்னும் இரண்டு புள்ளியை யிறுதியாகவுடைய பெயர் , ஈற்றயலெழுத்து நீண்டு விளியேற்கும்; எ - று.

எ - டு: குரிசில் , குரிசீல் , மக்கள், மக்காள் என வரும்.

(27)