2.உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
லகர ளகர ஈறு
வினையின்கண்ணும் பண்பின்கண்ணும் வரும் ஆளீற்றுப்பெயர் , இயல்பாகாது , ஆயாய் விளியேற்கும் ; எ- று.
எ - டு: நின்றாள் , நின்றாய் எனவும் ; கரியாள் , கரியாய் எனவும் வரும்.
விளிவயினான என்பதனை முன்னும் பின்னுந் தகுவனவற்றோடு கூட்டுக.