4.விளிமரபு

உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

ளகர ஈற்றுள் விளிஏலாதவை

148சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.
 

அவள், இவள், உவளென்னும் ளகார ஈற்றுச் சுட்டு முதற்பெயரும், யாவளென்னும் வினாப்பெயரும், மேற்கூறிய சுட்டு முதற்பெயரும் வினாப்பெயரும்போல, விளிகொள்ளா ; எ-று.

(31)