4.விளிமரபு

உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு

லகர ளகர ஈற்று அளபெடைப்பெயர்

149அளபெடைப் பெயரே அளபெடை யியல.
 

லகார ளகாரவீற்றளபெடைப்பெயர், மேற்கூறிய அளபெடைப்பெயரே போல, அளபு நீண்டு இயல்பாய் விளியேற்கும் ; எ-று.

எ - டு: 1மா அஅல், கோஒஒன் என வரும்.

இவை அளபெடைப் பெயராயின் , மால் கோளென அளபெடையின்றி வருவன செய்யுணோக்கி அளபு சுருங்கி வந்தனவாம் ; இவை அளபெடைப் பெயரல்லவாயின் , அளபெடைப்பெயர் வந்தவழிக் கண்டு கொள்க.

(32)

1. `மாஅஅல் நின்னிறம்போல் மழையிருட் பட்டதே, கோஒஒன் கொளக்கோடு கொண்டு' என்ற அடிகளிலுள்ள சொற்கள் வந்துள்ளன.