4.விளிமரபு

3.விரவுப்பெயர் விளியேற்குமாறு

150கிளந்த இறுதி அஃறினை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.
 

உயர்திணைப் பெயரும் உயர்திணை விரவுப் பெயரும் விளிகொள்ளுமாறுணர்த்தி , இனி யஃறிணை விரவுப்பெயர் விளிகொள்ளுமா றுணர்த்துகின்றார்.

கிளந்த இறுதியாவன உயிரீறு நான்கும் புள்ளியீறு நான்குமாம் . அவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைக் கண்வரும் விரவுப்பெயர் மேற்கூறிய நெறியான் விளியேற்கும்; எ-று.

எ - டு: சாத்தி , சாத்தீ , பூண்டு , பூண்டே; தந்தை, தந்தாய் எனவும் , சாத்தன் , சாத்தா ; கூந்தல் ; கூந்தால், மக்கள் , மக்காள் எனவும் வரும். சாத்தி , பூண்டு, தந்தை , சாத்த என அண்மைவிளியாய் வருவனவுங் கொள்க.

ஓகாரவீறும் ரகாரவீறுமாய் வருவன விரவுப்பெயருள வேற்கொள்க. பிறவுமன்ன.

(33)