5.பெயரியல்

சொற்களின் இயல்பு

சொற்களின் பாகுபாடு

159இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்று மென்ப.
 

இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் ; எ-று.

அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்றாரேனும், பெயரையும் வினையையுஞ் சார்ந்து தோன்றும் இவ் விரண்டையும் அவற்றோடு தலைப் பெய்யச் சொல் நான்கா மென்பது கருத்தாகக் கொள்க. சார்ந்து தோன்றுமெனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும். வழக்குப் பயிற்சி நோக்கி இடைச்சொல் முற்கூறினார்.

(5)