எல்லாரு மெனவும் , எல்லீரு மெனவும் , பெண்மகனெனவும் வரும் மூன்றும் மேற் கூறப்பட்டனபோலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம் ; எ-று. புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார்1இக் காலத்தும் பெண் மகனென்று வழங்குப. எல்லாரும் எல்லீரும் என்புழிப் படர்க்கைப் பன்மை யுணர்த்தும் ஆரும் முன்னிலைப் பன்மை யுணர்த்தும் ஈரும் உம்மை யடுத்து வருதலானும் பெண்மகனெனப் பால் திரிதலானும் , இவற்றை வேறு கூறினார். (10)
1. மாறோக்கம் - கொற்கை சூழ்ந்த நாடு . மாறோகம் எனவும் பாடம். |