5.பெயரியல்

உயர்தினைப் பெயர்கள்

புறனடை

166அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

மேற்சொல்லப்பட்ட பெயர்போல்வன பிறவும், உயர்திணைக்கண் பன்மையும் ஒருமையுமாகிய பாலறிவந்த எல்லாப்பெயரும் உயர்திணைப் பெயராம் ; எ-று.

1 பாலறிவந்த என்னாது ஒருமைப்பாலுணர்த்துவனவும், அடங்குதற்குப் `பன்மையும் ஒருமையும் பாலறிவந்த' என்றார்.

அன்ன பிறவுமாவன - ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார், என்னுந் தொடக்கத்தன.

(12)

1. முப்பாலறிவந்த எனவும் பாடம்.