நிறுத்தமுறையானே உயர்திணைப் பெயருணர்த்தி, இனியஃறிணைப் பெயருணர்த்துகின்றார். அது, இது, உதுவென் வரூஉம் பெயரும் , அப்பெயர்க்கு முதலாகிய சுட்டே முதலாக ஆய்தத்தோடு கூடி அஃது, இஃது, உஃது என வரூஉம் பெயரும் ; அவை, இவை, உவையென வரூஉம் பெயரும், அச் சுட்டே முதலாக அவ் , இவ் , உவ் என வரூஉம் வகரவீற்றுப் பெயரும் , யாது , யா, யாவை என்னும் வினாப்பெயருமென இப் பதினைந்து பெயரும், பால் விளங்க வரூஉம் அஃறிணைப் பெயராம் ; எ-று. சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும் அவை முதலாகிய வகரவீற்றுப் பெயரும் அவையல்லதின்மையின், அவ்வாறு கூறினார். (13) |