மேற்கூறப்பட்ட பெயர்போல்வன பிறவும், அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்குரிய ; எ-று. அன்னபிறவு மென்றதனாற் கொள்ளப்படுவன பிறிதுபிற; மற்றையது, மற்றையன, பல்லவை, சில்லவை; உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன. (16) |