மேற்கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும் பற்றிப் பாலுணர்த்திய வெடுத்துக்கொண்டார். அவை பெண்மைப் பெயர் நான்கும், ஆண்மைப்பெயர் நான்கும், பன்மைப் பெயர் மூன்றும், ஒருமைப்பெயர் மூன்றுமாம். பெண்மை பற்றி வரும் நான்கு பெயரும்,அஃறிணைப் பெண் ணொன்றற்கும் உயர்திணை யொருத்திக்கும் உரிய ; எ-று. அந் நான்குமாவன: பெண்மையியற்பெயரும், பெண்மைச்சினைப் பெயரும்,பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை முறைப் பெயருமேயாம். எ - டு: சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும்; முடகொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும்; அவை முறையானே அஃறிணைப் பெண்மைக்கும், உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. முடமென்பது சிணையது விகாரமாகலிற் சினையாயிற்று. ஒன்றற்குமெனப் பொதுப்படக் கூறினாரேனும், பெண்மை சுட்டிய பெயரென்றமையான் அஃறிணைப் பெண்ணென்றேயாம். இஃது `ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்' (சொல்-181) என்புழியுமொக்கும். ஒன்றிய நிலையுடையவற்றை `ஒன்றிய நிலை' யென்றார். (26) |