நீயிர் நீயென்னு மிரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி தெரியநில்லா; இருதிணையு முடன் றோன்றும் பொருள ; எ-று. உடன்மொழிப்பொருள வென்றது, இருதிணைப் பொருளும் ஒருங்கு வரத்தோன்று மென்றவாறு. பிரித்தொருதிணை விளக்கா வென்றவாறு. எ - டு: நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருதிணைக்கு முரிய பெயரெல்லாந் தத்தமரபின் வினையொடு வந்து திணை விளக்குமன்றே; இவற்றிற்கு அன்ன வினையின்மையின் ஒருவாற்றானுந் திணை விளக்காமையின், `பாறெரிபிலவே யுடன் மொழிப் பொருள்' வென்றார். (34) |