5.பெயரியல்

விரவு பெயர்கள்

அவற்றுள்,நீ என்னுஞ் சொல்

189அவற்றுள்
நீயென் கிளவி யொருமைக் குரித்தே.
 

மேற்சொல்லப்பட்ட இரண்டுபெயருள் நீயென்னும் பெயர் ஒருமைக்குரித்து ; எ-று.

ஒருமையாவது,ஒருவன் ஒருத்தி, ஒன்றென்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை.

எ - டு:நீ வந்தாய் என வந்தவாறு கண்டுகொள்க.

(35)