5.பெயரியல்

விரவு பெயர்கள்

அதன் வினைமுடிபு

192தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும்.
 

ஒருவரென்னும் பெயரதியல்பு கருதின் அஃது ஒருமைப் பெயராயினும், பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கேற்கும் ; எ-று.

எ - டு:ஒருவர் வந்தார், ஒருவரவர் என வரும், ஒருமைப் பெயர் பன்மை கொள்ளாதாயினும், இது வழுவமைதியிலக்கணமென்ப தறிவித்தற்குத் தன்மைசுட்டினென்றார்.

(38)