காரணத்தால் தன்மை திரிந்த பொருளை, அத்திரிபு கூறுங்கால், ஆக்கங் கொடுத்துச் சொல்லுக; எ-று. ஆக்கமொடு கூறல் என்பதனால் திரிபு கூறுதல் பெற்றாம்.என்னை?அதன்கணல்லது வாராமையின்1. இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்பன , இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. (20)
1. "ஆக்கமொடு கூறல் ............வாராமையின்" - ஒரு பொருள் வளர்ச்சியடைவதும் திருந்துவதும் கெடுவதும் இன்னொரு பொருளாய் மாறுவதுமே ஆக்கமாம். அவ்வகை யாக்கமும் திரிபேயாதலின் , ஆக்கம் கூறவே திரிபும் உடன் கூறியவாறாம். ஆக்கத்தினாலன்றி வேறு வகையில் திரிபில்லை என்பது. |