அர் ஆர் ப என்னுமீற்றையுடையவாய் வருமூன்று சொல்லும் பல்லோரையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் ; எ - று. ரகாரவீறு இரண்டும் மூன்றுகாலம் பற்றி வரும் ; பகாரம் எதிர்காலம் பற்றி வரும் . எ - டு :உண்டனர் , உண்ணாநின்றனர், உண்பர் எனவும் ; உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவும் ; உண்ப எனவும் வரும் . அன்னீற்றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும் , ஆனீற்றிற்குரிய காலவெழுத்து ஆரீற்றிற்கு முரிய. பகரம் உகரம்பெற்றும் பெறாதும் , உரிஞுப, உண்ப என வரும் . வருகுப எனச் சிறுபான்மை குகரமும் பெறும் , இவ்வேறுபாடு ஏற்புழியறிந் தொட்டிக் கொள்க. (9) |