6.வினையியல்

உயர்திணை வினை

வினைமுற்றுக்களின் ஈறுகளிற் சில திரியுமாறு

212ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.
 

முன்னிலையீற்றுள், ஆயென்னுமீறு மேற்கூறப் பட்டனபோல ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளுள் ; எ - று.

எ - டு : `வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப' (அகம் - 80) என வரும்.

கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஓகாரமாதல் பெயரியலுட் கொள்ளப்படும்.

ஆயென்கிளவி ஆவோவாவது பெரும்பான்மையும் உயர்திணைக்கண் வந்தவழி யென்பதறிவித்தற்கு , முன்னிலை யதிகாரத்துக் கூறாது ஈண்டுக் கூறினார்.

அவற்றொடு கொள்ளுமென்றது அவற்றோ டொக்கு மென்றவாறு.

(15)