6.வினையியல்

அஃறிணை வினை

அஃறிணைக்குரிய பன்மை வினைமுற்றுகள்

218 பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.
 

பன்மையும் ஒருமையுமாகிய பாலறியவந்த அவ்வாறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம்; எ - று.

பன்மையு மொருமையும் பாலறிவந்த வென்பதற்கு முன்னுரைத் தாங்குரைக்க.

இதனாற் பயன், அஃறிணைச்சொல் ஆறே பிறிதில்லையென வரையறுத்தலெனக் கொள்க.

(21)