காரணமுதற்றெனப்பட்ட ஆக்கச் சொல்காரணமின்றி வரினுங் குற்றமின்று வழக்கினுள்; எ-று. எ - டு: மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின எனவரும். வழக்கினுட் காரணமின்றியும் வருமெனவே, செய்யுளுட் காரணம் பெற்றே வருமென்பதாம். எ - டு: `பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை' (புறம்-14) எனவும்,தெரிகணை யெஃகம் திறந்தவா யெல்லாம் குருதி படிந்துண்ட காகம்-உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து." (களவழி நாற்பது-5) வருமழைய வாய்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக் கருமுருகன் சூடிய கண்ணி-திருநுதலால் இன்றென் குரற்கூந்தல் பெய்தமையால் பண்டைத்தன் சாயல வாயின தோள்" எனவும் காரணம் பெற்று வந்தவாறு கண்டுகொள்க. குக்கிற் புறத்த, சிரல்வாய என ஆக்கமின்றி வந்தனவா லெனின்:- தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பதனான் ஆண்டாக்கந் தொக்கு நின்றதென்பது.அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் றோளே" (குறுந்-77) நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு" (குறள்-305) எனவும், செயற்கைப் பொருள் செய்யுளுள் காரணமின்றி வந்தனவாலெனின்:-களவுக்காலத் தரியன இக்காலத்து எளியவாயின என்பது கருத்தாகலான், இக்காலங் காரண மென்பது பெறப்படுதலானும், ஊழாலென்பது அதிகாரத் தான் வருமாகலானும், அவை காரணமின்றி வந்தன எனப்படாவென்பது.(22) |