6.வினையியல்

விரவு வினை

முன்னிலை யொருமை வினைமுற்று,

223அவற்றுள்
முன்னிலைக் கிளவி
இ ஐ ஆயென வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.
 

கூறப்பட்ட விரவுவினைகளுள், முன்னிலைச் சொல். இகரவீறும் ஐகாரவீறும் ஆயீறுமாகிய மூன்றும் ஒருவற்கும். ஒருத்திக்கும் ஒன்றற்கும் ஒப்பச்செல்லும்; எ - று.

முன்னிலைக்கிளவி யென்பதற்கு முடிபு `அவைதாம் அம் ஆம் எம் ஏம்' (சொல் - 202) என்புழி `அவைதாம்' என்பதற் குரைத்தாங் குரைக்க.

இகரம் தடற வூர்ந்து எதிர்காலம் பற்றி வரும். ஐகாரம் அம்மீற்றிற்குரிய எழுத்துப்பெற்றும். ஆயீறு ஆமீற்றிற் குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும்.

எ - டு : உரைத்தி, உண்டி, தின்றி எனவும்; உண்டனை, உண்ணா நின்றனை, உண்பைஎனவும் ; உண்டாய் , உண்ணா நின்றாய், உண்பாய் எனவும் வரும். ஒழிந்தவெழுத்தோடு மொட்டிக் கொள்க. `ஐயசிறி தென்னை யூக்கி' (குறிஞசிக்கலி - 1) என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வரும்.

உண், தின்; நட, கிட என்னுந் தொடக்கத்து முன்னிலை ஒருமை பெறுமாறென்னையெனின் :- அவை ஆயீறாதல் எச்சவியலுட் பெறப்படுமென்க.

(26)