பல்லோர் படர்க்கையும் முன்னிலையும் தன்மையுமாகிய அவ்வயின் மூன்றும், நிகழ்காலத்து வருஞ் செய்யுமென்னுஞ் சொல்லோடு, பொருந்தா; எ - று. அவ்வயி னென்றது, இடமும் பாலுமாகிய எஞ்சிய கிளவிக்குரிய பொருட்கண் என்றவாறு. நிகழுங்காலத்துச் செய்யுமென்னு கிளவியோடென அதனாற்றோன்றுங் கால முணர்த்தியவாறு. இவையிரண்டு சூத்திரம் பொதுவகையா னெய்தியன வற்றை விலக்கி நின்றன. (30) |