மேற்சொல்லப்பட்ட பதினைந்து வினையெச்சத்துள் , முதற்கணின்ற செய்து , செய்யு , செய்பு என்னுமூன்றும் தம் வினைமுதல் வினையான் முடியும்; எ - று. எ - டு : உண்டு வந்தான் , உண்ணூ வந்தான், உண்குபு வந்தான் எனவும்; கற்று வல்லனாயினான் , கல்லூ வல்லனாயினான் , கற்குபு வல்லனாயினான் , எனவும் வரும். உரற்கால் யானை யொடுத்துண் டெஞ்சிய யாஅவிரி நிழற்றுஞ்சும்' (குறுந் - 232) எனச் செய்தெனெச்சம் வினை முதல் வினையல்லா வினையான் முடிந்ததா லெனின்:- அது `வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய' (சொல் - 457) என்புழிப் பெறப்படும். இது முன்னர், வினையெஞ்ச கிளவிக்கு வினையுங் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபா கும்மே (சொல் - 432) எனப்பொதுவகையான் முடிவனவற்றை எதிரது நோக்கி இவை மூன்றும் வினைமுதன் முடிபினவென நியமித்தவாறு. அஃதேல் இதனையும் ஆண்டே கூறுகவெனின் :- ஆண்டுச் செய்து செய்யூச் செய்பு என்னு மூன்றுமெனக் கிளந்தோதுவதல்லது , முதனிலை மூன்றுமெனத் தொகுத்தோதலாகாமையானும் , ஈண்டு இயைபுடைத் தாகலானும் , ஆண்டுக் கூறாது ஈண்டுக் கூறினாரென்பது. (33) |