6.வினையியல்

விரவு வினை

செய்யும் என்னும் பெயரெச்சம் ஈறுகெடுதல்

238அவற்றள்
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசையுகரம்
அவ்விட ன்றித லென்மனார் புலவர்.
 

மேற்சொல்லப்பட்ட எச்சங்களுட் செய்யுமென்னும் பெயரெச்சத்திற்கு ஈற்றுமிசை நின்ற உகரந் தன்னானூரப்பட்ட மெய்யொடுங் கெடுமிட மறிக; எ - று.

எ - டு : கெடுமிடமறிக வென்றது, அவ்வீற்றுமிசையுகரம் யாண்டுங்கெடாது வரயறுக்கவும்படாது சான்றோர் வழுக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க வென்றவாறு.

எ - டு : வாவும்புரவி, போகும்புழை என்பன ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங்கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடு மெனவே, செய்யுமென்னு முற்றுச்சொற்கு ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெடும் மெய்யொழித்துங் கெடுமென்பதாம்.

`அம்ப லூரு மவனொடு மொழிமே' (குறுந்-51), `சாரனாடவென் றோழியுங் கலுழ்மே' என வரும். பிறவு மன்ன.

(41)