என்றென்னு மிடைச்சொல்லும் என வென்பது போல அவ்வாறு பொருளுங் குறித்து வரும்; எ - று. எ - டு : நரைவரு மென்றெண்ணி ( நாலடி - 11) எனவும், ` விண்ணென்று விசைத்தது ' எனவும், `ஓல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு ' ( ஐந்திணை ஐம்பது - 28) எனவும், ` பச்சென்று பசுத்தது ' எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும் பாரி யென்றொருவனுளன் எனவும் வரும். (11) |